மோடியின் காலைத்தொட்டு வணங்கிய பிரதமர்
பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, மோடியின் பாதங்களைத் தொட்டு வரவேற்பு அளித்துள்ளார்.
இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (எஃப்ஐபிஐசி) மூன்றாவது உச்சிமாநாட்டையொட்டி இந்திய பிரதமர் மோடி , நேற்று (21) பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.
மோடிக்கு விதிவிலக்கு
இதனூடாக பப்புவா கியூகினி நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோடியை பெற்றுள்ளார்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் பப்புவா நியூ கினியில் வழக்கமாக வரவேற்பு அளிக்கப்படுவதில்லை.
எனினும் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்குப் பிறகு வந்த பிரதமர் மோடிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நரேந்திர மோடியை வரவேற்ற, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரை கட்டித்தழுவியதுடன், காலில் விழுந்து வரவேற்றுள்ளார்.