விம்பிள்டன் ஆண்களுக்கான இறுதிப் போட்டியை காண வந்த பிரித்தானிய இளவரசி
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் விம்பிள்டன் ஆண்கள் இறுதிப் போட்டியை காண வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் கடந்த பெப்ரவரியில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுவெளியில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் இருந்தும், அரச சேவைகளில் இருந்தும் சற்று விலகி இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விம்பிள்டன் ஆண்கள் இறுதிப் போட்டியை காண வேல்ஸ் இளவரசி கேட் பொது வெளியில் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த நிகழ்வில் அவரது மகள் இளவரசி சார்லோட் மற்றும் சகோதரி பிப்பா ஆகியோர் அவருடன் சென்றுள்ளார்.
A wonderful Centre Court welcome for our Patron HRH The Princess of Wales ?#Wimbledon pic.twitter.com/HGcphka27P
— Wimbledon (@Wimbledon) July 14, 2024
அத்துடன் இந்த போட்டியின் வெற்றியாளருக்கு கோப்பை வழங்கும் கௌரவத்தையும் இளவரசி கேட் மிடில்டன் பெற்றுள்ளார்.
இது அவரது புற்றுநோய் கண்டறியப்பட்டதிலிருந்து இரண்டாவது பொது தோற்றம் என்பதோடு, இதற்கு முன்னதாக கடந்த மாதம் ட்ரூப்பிங் தி கலர் நிகழ்வில் கேட் மிடில்டன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
The Princess of Wales and Princess Charlotte arriving together at #Wimbledon this afternoon ? pic.twitter.com/3JNBFxI7vJ
— Belle (@RoyallyBelle_) July 14, 2024