தொடக்க விழாவில் தூங்கி வழிந்த புதின்!
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் உக்ரைனின் அணி மைதானத்தின் வழியாக அணிவகுத்துச் சென்றபோது, ரஷ்ய அதிபர் புதின் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 24 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கவிழாவை யொட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் வண்ணமிகு வாண வேடிக்கைகடன் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை மிக உயரமான 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பலர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
இந்தநிலையில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது, உக்ரைன் அணி மைதானத்தின் வழியாக அணிவகுத்துச் சென்ற போது, ரஷ்ய அதிபர் நன்றாக உறங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
அத்துடன் விளையாட்டு வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அவர்களின் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போதும், புதின் தனது நாற்காலியில் கண்களை மூடிய நிலையில் கேமராவில் சிக்கினார் என யுகே இண்டிபெண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி குழு பெய்ஜிங்கின் தேசிய மைதானத்திற்குள் நுழைந்த நேரத்தில், புதின் விழித்து எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.