படுகொலை செய்யப்படலாம்... பயத்தில் பதுங்கும் விளாடிமிர் புடின்
உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்யா வலுக்கட்டாயமாக வெளியேறிய நிலையில், தாம் படுகொலை செய்யப்படலாம் என ஜனாதிபதி புடின் அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோவில் போர் ஆதரவு ஆதரவாளர்களிடமிருந்தும் மேற்கத்திய நாடுகளில் இருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என விளாடிமிர் புடின் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து பின்னடைவை எதிர்கொள்வதால், ரஷ்யாவில் போர் ஆதரவு குழுக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பாலியில் முன்னெடுக்கப்படும் ஜி20 மாநாட்டிற்கு செல்வதில் இருந்து விலகிக்கொண்டதும், உயிர் பயம் காரணமாகவே என கூறப்படுகிறது.
எதிரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தம்மை படுகொலை செய்யலாம் என புடின் அஞ்சுகிறார். மேலும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உக்ரைன் சிறப்பு படையினரால் தாம் குறிவைக்கப்படலாம் என்ற பயம் காரணமாகவே புடின் ஜி20 மாநாட்டை தவிர்ப்பதாக கூறுகின்றனர்.
மட்டுமின்றி, மாநாட்டின் போது புடின் அவமானப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், அதை உலக ஊடகங்கள் கொண்டாடும் சூழல் உருவாகும் எனவும் ரஷ்ய தரப்பு அஞ்சுகிறது.
மேலும், கெர்சன் பகுதியில் இருந்து வெளியேறியது, உக்ரைனுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.