உணவுப் பழக்கத்தையே மாற்றிக்கொண்ட இளம் கனேடியர்கள்: ஏன் தெரியுமா?
கனடாவின் அதிகளவு மக்கள் மலிவான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யத் தொடங்கியுள்னர்.
பணவீக்கம் மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கனேடிய மக்கள் மலிவான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதுடன், சில உணவுப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வதாகவும், குறைவாக உணவு உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நானோஸ் ஆய்வு ( Nanos Research) நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாத காலமாக கனேடிய மக்களின் உணவுக் கொள்வனவு தொடாபில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் அறுபது வீதமான கனேடியர்கள் இவ்வாறு குறைந்த விலையிலான அல்லது மலிவு விலையிலான உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இருபத்து ஐந்து சதவீதமான கனேடியர்கள் தங்களது உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்களே அதிகளவில் தங்களது உணவுக் கொள்வனவு முறைமையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.
பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இளம் கனேடியர்கள் தங்களது உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.