வரலாற்றில் முதல்முறை ; விமானப்படையின் உதவி செயலாளராக இந்திய-அமெரிக்கரை நியமித்த செனட் சபை !
இந்திய வம்சாவளி அமெரிக்க குடிமகன் ரவி சவுத்ரி (Ravi Chaudhary) அமெரிக்க விமானப்படையின் உதவி செயலாளராக அமெரிக்க செனட் சபை புதன்கிழமை நியமித்துள்ளது.
இந்நிலையில் விமானப்படையின் உதவி செயலாளராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்கர் ரவி சவுத்ரி (Ravi Chaudhary) ஆவார். விமானப்படையில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பானவைகளுக்கு ரவி உதவி செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
ரவி சௌத்ரி (Ravi Chaudhary) வணிக விண்வெளி போக்குவரத்து பணிகளின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்குரிய பொறுப்பில் பணியாற்றினார்.
அத்துடன் போக்குவரத்துத் துறையில் இருந்தபோது, அவர் பிராந்தியங்கள் மற்றும் மைய நடவடிக்கைகளின் நிர்வாக இயக்குநராகவும் ரவி சௌத்ரி பணியாற்றியிருந்தார்.
அதுமட்டுமல்லாது ரவி சௌத்ரி ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற போர்களிலும் பங்கேற்றுள்ளார். விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சௌத்ரி (Ravi Chaudhary) ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் வணிக விண்வெளி அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற அ ரவி சௌத்ரியை (Ravi Chaudhary) நியமித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.