கனடாவின் இந்தப் பகுதியில் கடும் மழை, போக்குவரத்து பாதிப்பு
கனடாவின் மொன்றியாலில் கடுமையான மழை பெய்து போக்குவரத்தை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளம் காரணமாக வீதியில் பயணம் செய்த சில சாரதிகள் தங்களது வாகனங்களை கைவிட்டுச் செல்ல நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழை வீழ்ச்சி காரணமாக சில பகுதிகளின் வீதிகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியால் பெரும்பாகப் பகுதியில் மழை பெய்யும் எனவும் சுமார் 70 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
மழை காரணமாக வீதியில் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய காரணத்தினால் சிலர் வாகனங்களின் கூரைகள் மேல் ஏறி உதவி கூறியதாகவும் அவ்வாறு உதவி கோரியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ள நீர் அதிகரிக்கும் வேளையில் வாகனத்தில் இருக்காது அதனை விட்டு வெளியேறி செல்லுமாறு போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மொன்றியல் விமான நிலையத்தின் விமான பயணங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 12,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் மின்சார வசதியை இழக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.