அகதிகளை நாடு கடத்தும் திட்டம்; ரிஷி சுனக் மசோதாவுக்கு எதிர்ப்பு
பிரிட்டன் வரும் சட்டவிரோத குடியேறிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரதமா் ரிஷி சுனக் மசோதாவுக்கு எதிர்ப்பு வெளியிடப்படுள்ளது.
பிரிட்டனுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான அரசை வலியுறுத்தும் தீா்மானம் அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்டது.
பிரபுக்கள் சபையில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில், தீா்மானத்துக்கு ஆதரவாக 214 பேரும், எதிராக 171 பேரும் வாக்களித்தனா்.
இந்தத் தீா்மானத்தால் அரசின் இந்த முயற்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இல்லை எம்றபோதும், அந்தத் திட்டத்துக்கு எம்.பி.க்களிடையே அதிகரித்து வரும் எதிா்ப்பை இந்தத் தீா்மானம் வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.