கனடாவில் பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் வீழ்ச்சி
கனடாவில் பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வாரமொன்றில் ஆண்களில் 68 வீதமானவர்கள் விளையாட்டுகளில் பங்குபற்றுவதாகவும், பெண்களில் 63 வீதமானவர்களே பங்குபற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு முதல் 18 வயது வரையிலான பெண் பிள்ளைகள் கூடுதல் எண்ணிக்கையில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குழுவாகவும், தனியாகவும் ஒப்பீட்டளவில் பெண்களின் விளையாட்டுப் பங்களிப்பு ஆண்களை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.
பதின்ம வயதில் விளையாட்டுக்களிலிருந்து ஒதுங்கும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டுக்களில் ஈடுபடாமை உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.