கனேடிய ஆய்வாளர்கள் பெற்றோருக்கு விடுத்துள்ள்ள எச்சரிக்கை
சில வகை உணவுப் பொருட்களை உட்கொள்ளும் சிறுவர்கள் நோய்வாய்ப்படுவதாகவும், இது குறித்து பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் கனேடிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவர்கள் விரும்பி உண்ணும் சில வகை இனிப்பு வகைகளில் போதைப் பொருட்கள் கலந்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவற்றை உட்கொண்ட சில சிறார்கள் வைத்தியசாலைளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பத்து வயதுக்கும் குறைந்த சிறார்கள் இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சொக்கலட் வைக்கள், பேக் செய்யப்பட்ட உணவு வகைகள், இனிப்பு பண்டங்கள் என்பனவற்றில் இவ்வாறு போதைப் பொருட்கள் கலந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
உலர்த்திய கஞ்சா இலைகள் உள்ளடங்கிய உணவுப் பொருட்களை உட்கொண்ட சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை இரண்டரை மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வாளர் டொக்டர் டெனியல் மய்ரான் தெரிவிக்கின்றார்.
ஒன்றாரியோ, அல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் இது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள் கலந்த உணவுப் பொருட்களை சட்ட ரீதியானதாக்கியதன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
சிறுவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகளில் உலர்ந்த காஞ்சா இலைகள் உள்ளிட்ட சில வகை சேர்மானங்களை முழுமையாகவே தவிர்ப்பது உசிதமானது என ஆயவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.