சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க கனடா அரசு முடிவு
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக, கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் மக்கள்தொகை 41 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் என்று கூறி, அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
2023ஆம் ஆண்டு, 5,00,000க்கும் அதிகமான சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கியது. 2024ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு 4,85,000 சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அடுத்த ஆண்டில், அதாவது, 2025ஆம் ஆண்டில், 4,37,000 பேருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் இறுதிவாக்கிலிருந்து, முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில், குறைந்தபட்சம் 16 மாதங்களாவது படிக்கும் வகையிலான கல்வித்திட்டங்களில் சேருவோரின் துணைவர்களுக்கு மட்டுமே கனடாவில் பணி அனுமதி வழங்கப்பட உள்ளது.