பிரித்தானியாவில் ஆட்சியை இழக்கும் அபாயத்தில் ரிஷி சுனக்!
இடைத்தேர்தலில் இரண்டு தோல்விகளை சந்தித்தாலும், அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிபெற முடியும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த இடைத் தேர்தல் முடிவுகள் ரிஷி சுனக்கிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
மேலும், இதேநிலை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைவது நிச்சயம் என்றே கூறுகிறார்கள்.
பிரித்தானியாவில் நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
மேற்கு லண்டனில் உள்ள உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில் மட்டும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது.
குறித்த இந்த தொகுதியில் கூட வெறும் 500 வாக்கு வித்தியாசத்தில் தான் ரிஷி சுனக் கட்சியால் வெல்ல முடிந்தது.