தனது பால்ய கால நினைவுகளை நினைவுகூர்ந்த பிரதமர் ரிஷி சுனக்
தனது சிறுவயதில் நிறைய விஷயங்களை தான் இழந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் பிரித்தானியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே பிரதமர் ரிஷி சுனக் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது எப்போதாவது ஏதாவது இல்லாமல் நீங்கள் இருந்திருக்கிறீர்களா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரிஷி சுனக்,
நான் சிறுவயதாக இருந்தபோதே எனது பெற்றோர்கள் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்தனர். கடின உழைப்போடும், மதிப்புடனும் தாம் வளர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறுவயதில் எது இல்லாமல் போனது? எவற்றையெல்லாம் தியாகம் செய்தீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரித்தானிய பிரதமர், தாம் சிறுவயதில் நிறைய தியாகம் செய்துள்ளதாகவும், சிறுவயதில் அனுபவிக்க வேண்டிய சிறுசிறு விடயங்களைக் கூட தாம் தியாகம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக ஸ்கை டிவி கூட தாம் பார்க்கவில்லை எனவும், தாம் படிக்க வேண்டும் என்பதையே அவரது பெற்றோர் விரும்பியதாகவும் பிரிதமர் ரிஷி சுனக் இதன்போது தெரிவித்தார்.