இடிந்துவீழ்ந்த பாடசாலைக் கட்டடகே கூரை; 10 பேர் உயிரிழப்பு
சீனாவில் பாடசாலைக் கட்டடமொன்றின் கூரை இடிந்துவீழ்ந்ததால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேய்லோங்ஜியாங் மாகாணத்திலுள்ள குய்குய்ஹார் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் இன்று அதிகாலை வரை 14 பேர் இடிபாடுகளிலிருந்து அகற்றப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள்
இவர்களில் நால்வர் உயிரிழந்து காணப்பட்டதாகவும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகளில் 39 தீயணைப்பு வாகனங்ள் சகிதம் 160 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் கட்டங்களுக்குப் பொறுப்பான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.