புதிய இராணுவ தளபதியை நியமித்த ரஷ்யா!
மரியுபோல் முற்றுகைக்கு தலைமை தாங்கிய இராணுவ அதிகாரியை ரஷ்யா புதிய தளபதியாக நியமித்துள்ளது.
இதன்படி லெப்டினன்ட் ஜெனரல் ஆண்ட்ரே மோர்ட்விச்சேவ் நாட்டின் மத்திய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் ரஷ்யாவின் தரைப்படைகளின் தலைமை அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கர்னல்-ஜெனரல் அலெக்சாண்டர் லாபினுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு, லெப்டினன்ட் ஜெனரல் மோர்ட்விச்சேவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்ய துருப்புக்களை வழிநடத்தினார்.
அவரின் வழிநடத்தலின் கீழ் அசோவ்ஸ்டல் நகரம், ஸ்டீல்வேர்க்ஸ் கைப்பற்றப்பட்டது. இது போரின் போக்கை மாற்றுவதில் முக்கிய பங்குவகித்தது.
அதன்படி கடந்த காலங்களில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களை மொஸ்கோ இழக்க தொடங்கியிருந்தது. இந்நிலையில், இந்த வெற்றி ரஷ்ய படை வீரர்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்தது எனலாம்.
ஆகவே இந்த பின்னணியில் ரஷ்யா இராணுவ தலைமையில் பெரும் மாற்றங்களை ஏற்பட்டுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.