உக்ரைன் மீது அதிநவீன ஹைப்பா்சோனிக் ஏவுகணையை பிரயோகித்த ரஷ்யா
அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ‘கின்ஜால்’ மூலம் உக்ரைனை முதன்முறையாக தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஐகோ கொனாஷென்கோவ் கூறியதாவது: ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. மேற்கு உக்ரைனில் ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய நிலத்தடி கிடங்கு அழிக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. பிப்ரவரி 24 முதல் உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் குறித்த விவரங்களை ரஷ்யா வெளியிடவில்லை.
முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ‘கின்ஜால்’ பயன்படுத்தப்படுவதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒலியை விட 10 மடங்கு வேகமாக செல்லக்கூடிய கிஞ்சல் ஏவுகணை, இடைமறிக்கும் ஏவுகணைகளை முந்தி சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும்.