உக்ரைன் மீது 600 ஏவுகணைகளை ஏவிய ரஷியா
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராத உக்கிர போராக மாறி வரும் நிலையில், இதுவரை 600 ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது ஏவியுள்ளதாக கூறப்படுகின்றது.
ராணுவ கட்டமைப்புகளை தகர்க்க்க போர் தொடுத்ததாக கூறிய ரஷ்யா, ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் என தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
இதனால் உக்ரைன் பெரும் இழப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இந்த போரினால் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 12-வது நாளாக எட்டியுள்ள நிலையில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உக்ரைனில் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளது ரஷியா.
இந்நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷியா மொத்தம் 600 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் உக்ரைனுக்குள் அதன் போர் சக்தியில் தோராயமாக 95 சதவீதத்தை செலவு செய்துவிட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறி உள்ளார்.