உக்ரைனில் மீண்டும் ஒரு நகரத்தை கைப்பற்றிய ரஷியா
உக்ரைனின் கெர்சன், எனர்கோடர் நகரங்களை தொடர்ந்து மிக்கலேவ் நகரை ரஷியா கைப்பற்றியது.
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது.
இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும், உக்ரைன் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் உள்ளது.
இந்நிலையில் உக்ரைனின் கெர்சன், எனர்கோடர் நகரங்களை தொடர்ந்து மிக்கலேவ் நகரை ரஷியா கைப்பற்றியது.தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகருக்குள் ரஷிய ராணுவம் நுழைந்தது.
இதன்படி முன்னதாக உக்ரைனில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின்நிலையம் 'சபோரிஸியா' அமைந்துள்ள எனர்ஹோடர் நகரத்தை கைப்பற்றியது ரஷ்ய ராணுவம்.
வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி கிவ் நகரில் ஒலிக்கப்பட்டு வருகிறது எனவும் ரஷிய போர் விமானங்கள் எல்லைப் பகுதிகளில் பறப்பதாகவும உக்ரைன் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.