ரஷ்யா - உக்ரைன் போர்; மக்களின் உயிரிழப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்
யுக்ரேனில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கி ஒருமாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை குறைந்தது 1,081 உக்ரைன் மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், 1,707 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
அத்துடன் , உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் உக்ரைனின் டொனியட்ஸ்க் பிரதேசம் உள்ளிட்ட தீவிர சண்டை நடைபெறும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.
அதேசமயம் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து தகவல்களை பெறுவது கடினமாக இருப்பதால், இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட, போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என ஐநா முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.