ரஷ்யா போலி தகவல்கள் பரப்புவதாக குற்றச்சாட்டு
ரஷ்யா போலி தகவல்களை பரப்பி வருவதாக கனடிய பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களின் வழியாக இவ்வாறு போலி தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சைபர் பாதுகாப்பு நிலையம் இது தொடர்பிலான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ரஷ்யா அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலி சமூக ஊடகப் பயனர்கள் இவ்வாறு போலி பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் ரஷ்ய அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஆதரவாக அமெரிக்கர்கள் கருத்து வெளியிடுவது போல் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போலி பிரச்சார நடவடிக்கைகளுக்கு எதிராக கனடா அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இணைய வழியில் இவ்வாறான போலி பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி பிரச்சாரங்கள் தொடர்பில் கடந்த மாதம் கனடாவிற்கு விஜயம் செய்திருந்த நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோலன்பர்க் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.