இணைய மோசடியில் ஈடுபட்ட கனேடிய – ரஸ்ய பிரஜை கைது
இணைய மோசடியில் ஈடுபட்ட கனேடிய – ரஸ்ய பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒன்றாரியோவைச் சேர்ந்த பிரஜையையே இவ்வாறு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பதுடன் அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
33 வயதான மிக்காய்ல் வாசிலிவ் (Mikhail Vasiliev) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட்ட கணனி வலையமைப்பை ஊடறுத்து கப்பம் கோரல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
100 மில்லியன் டொலர்களுக்கு மேல் கப்பம் கோரப்பட்டதாகவும் பெருந்தொகை கப்ப பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பயனர் ஒருவரின் கணனியை சட்டவிரோதமாக ஊடறுத்து அதில் உள்ள தகவல்களை களவாடி அதனை மீள வழங்குவதற்கு பெருந்தொகை பணம் கோரும் நடைமுறையே ரன்சம்வெயார் என குறிப்பிடப்படுகன்றது.
LockBit என்ற மேல்வெயார் பயன்படுத்தி கப்பம் கோரப்பட்டுள்ளது.
விசாரணைகளின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.