புட்டினின் கெடுபிடியால் நாட்டைவிட்டு தப்பியோடும் ரஷ்ய பணக்காரர்கள்!
உக்ரைனின் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் ரஷ்ய அதிபர் புடின் நடவடிக்கையால், சில பணக்கார ரஷ்ய குடிமக்கள், நாட்டைவிட்டு தப்பியோடும் முயற்சியில் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அவர்கள் கரீபியனில் உள்ள தொலைதூர தீவில் ஒரு கவர்ச்சியான மாற்றத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச் செல்ல விரும்பும் பணக்கார ரஷ்யர்கள்
தப்பிச் செல்ல விரும்பும் பணக்கார ரஷ்யர்களை முதலீட்டு முயற்சி ஊடாக கிரெனடாவின் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய, அதனை ஊக்குவிடும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி கடந்த சில நாட்களாக கிரெனடாவின் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்தின் பிரதான ஆலோசகராக ரிச்சர்ட் ஹாலம் செய்படுகின்றார். இந்த ஆண்டு விண்ணப்பதாரர்களின் மிகப்பெரிய பகுதியை உருவாக்க முடியும் என்று அவர் மதிப்பிடுகிறார்.
அதேசமயம் குறைந்தபட்சம் 224,000 டொலர் முதலீட்டிற்கு, விண்ணப்பதாரர்கள் கிரெனடா கடவுசீட்டை பெறலாம். இந்த கடவுசீட்டு மூலம் சீனா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் ஷெங்கன் பகுதி உட்பட 100 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கிறது.
அமெரிக்காவுடன் முதலீட்டாளர் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரே கரீபியன் நாடு இதுவாகும். இங்கு குடிமக்கள் குடியேறாமல் விசாக்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.
இந்நிலையில் , இந்த முதலீட்டை செய்து உடனடியாக இந்த கடவுசீட்டை பெறும் நடவடிக்கையில் ரஷ்ய பணக்காரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.