உக்ரேனிய வீரரின் துணிச்சலான செயல்: அஞ்சல் தலை வெளியிட்டு கெளரவம்
உக்ரேனிய இராணுவ வீரர் ஒருவர் ரஷ்ய போர் கப்பலை துணிச்சலாக எதிர்கொண்டு, தமது கடமையை நிறைவேற்றியதற்காக அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய போர் கப்பல் வீரர்களுக்கு எதிராக அவர் கூறிய வார்த்தைகள் நாடு முழுவதும் பிரபலமானதுடன், அவை போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகளாகவும் பயன்படுத்தப்பட்டது.
Roman Hrybo என்ற உக்ரேனிய வீரர் தமது சக வீரர்கள் 12 பேர்களுடன் Snake Island எனப்படும் குட்டி தீவுக்கு பாதுகாப்பு அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது.
குறித்த தீவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த Roman Hrybo உட்பட 13 வீரர்களும் ரஷ்ய தாக்குதலுக்கு கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அஞ்சப்பட்டது. மட்டுமின்றி, ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் அவ்வாறே தமது உரையிலும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, Roman Hrybo தொடர்பில் வெளியான காணொளி காட்சி ஒன்று, மொத்த உக்ரைன் மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் Snake Island-ஐ நெருங்கிய ரஷ்ய போர் கப்பல் ஒன்று எச்சரிக்கை விடுக்கின்றது.
தீவில் பணியில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் அனைவரும் ஆயுதnக்களை கைவிட்டு சரணடைய வேண்டும் எனவும், மறுப்பு தெரிவித்தால் தாக்குதல் நடத்த நேரிடும் எனவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், ரஷ்ய இராணுவ வீரரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், உக்ரேனிய வீரர் Roman Hrybo கூறிய பதில் தற்போது மொத்த உக்ரேனிய மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே Snake Island-ஐ கைப்பற்றிய ரஷ்ய துருப்புகள் Roman Hrybo உட்பட 13 வீரர்களையும் சிறை பிடித்தது. இந்த சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பிறகு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பேசுகையில் Snake Island-ல் பணியில் ஈடுபட்டிருந்த 13 வீரர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தார்.
அத பின்னரே, Roman Hrybo உட்பட 13 வீரர்களும் உயிருடன் இருப்பதாகவும், அவர்களை ரஷ்யா விடுவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், ரஷ்ய துருப்புகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட Roman Hrybo-வுக்கு மார்ச் 29ம் திகதி பதக்கம் அளித்து மரியாதை செய்துள்ளனர்.
மட்டுமின்றி அவர் Cherkasy பிராந்தியத்தை சேர்ந்தவர் என்பதால், அப்பகுதி நிர்வாகம் அவரது துணிச்சலை பாராட்டி அஞ்சல் தலை ஒன்றை வெளியிட முடிவு செய்து, அறிவித்துள்ளது.