பெண்களை சீரழித்த அமெரிக்க கோடீஸ்வரரின் சொத்துக்கள் பறிமுதல்
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டைனிற்கு (Jeffrey Epstein)சொந்தமான இரண்டு தீவுகளை விற்பனை செய்து அந்தத் தொகையை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இரண்டு கரீபியன் தீவுகளுக்கான விலை 125 மில்லியன் டாலராக குறிக்கப்பட்டுள்ளது.
சிறிய கட்டடங்கள், கிறிஸ்துமஸ் குடில் போன்ற , கடற்கரை பகுதிகள் போன்றவை கொண்ட இந்த தீவுகளை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
டோனால்ட் டிரம்ப்(Donald Trump), பில் கிளிண்டன்(Bill Clinton), இளவரசர் ஆண்ட்ரூ(Andrew) உள்ளிட்ட மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்பில் இருந்தவரான ஜெஃப்ரி எப்ஸ்டைன் (Jeffrey Epstein), சிறுமிகள் உட்பட 36 பெண்களை தவறான முறையில் சீரழித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தண்டனை பெற்று வந்த அவர், கடந்த 2019 ஆம் ஆண்டில் சிறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


