ரிஷி சுனக்கின் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
பிரிட்டனுக்குள் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் முந்தைய பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்தை ரத்து செய்வதாக பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
சமீப ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் அதிகமானோர் வரத் தொடங்கினர்.
2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் 2022-ம் ஆண்டு 45774 பேராக அது உயர்ந்தது. இதை கட்டுப்படுத்த முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் புதிய சட்டம் கொண்டு ஒன்றை கொண்டு வந்தார்.
இந்த புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்நிலையில், சட்ட விரோதமாகப் பிரிட்டனுக்குள் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் முந்தைய பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்தை ரத்து செய்வதாக பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.