கனடாவின் இந்தப் பகுதியில் விற்றுக் காலியாகும் மதுபானங்கள்; ஏன் தெரியுமா?
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் காணப்படும் மதுபான கடைகளில் வழமைக்கு மாறான கூடுதல் விற்பனை பதிவாகியுள்ளது.
ஒன்றாரியோ மாகாண எல்லை பகுதியில் அமைந்துள்ள கடைகளில் இவ்வாறு அதிகளவு மதுபான வகைகள் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் முதல்நிலை மதுபான விற்பனை நிலையங்களில் ஒன்றான LCBO இன் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு மக்கள் அதிக அளவில் மதுபானத்தை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
LCBO நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒன்றாரியோ மாகாணத்திற்கு அருகாமையில் காணப்பட்ட சுமார் 20 முதல் 25 மதுபான கடைகளில் அதிக அளவு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 5ம் திகதி முதல் சுமார் பத்தாயிரம் பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாரியோ மாகாணத்தில் மதுபான விற்பனை விஸ்தரிப்பு திட்டத்திற்கு LCBO நிறுவன பணியாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.