கோவிட்டால் பயணத்தை பாதியில் கைவிட்ட பாரிய கப்பல்!
தி மஜெஸ்டிக் பிரின்சஸ் (The Majestic Princess) பயணக்கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளிடையே COVID-19 சம்பவங்கள் பதிவாகியதால் அக்கப்பல் பயணத்தை பாதியில் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 12 நாள் பயணத்தைப் பாதியில் கைவிட்டுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிறுத்தப்பட்டது. கப்பலில் 4,600 பயணிகளும் ஊழியர்களும் பயணம் சென்றுகொண்டிருந்ததாக Nine News தெரிவித்தது.
800 பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் கோவிட்
3,300 பயணிகளைச் சோதித்ததில் சுமார் 800 பயணிகளுக்கும் சில ஊழியர்களுக்கும் கோவிட் நோய் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
நோய்த்தொற்று ஏற்பட்ட பயணிகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில், அவர்களை கப்பலிலிருந்து வெளியேறி 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டதாக Nine News கூறியது.
அதேவேளை நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாதவர்கள் கப்பலைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.