மேகனுக்கு அதிர்ச்சி கொடுக்கவுள்ள தொலைக்காட்சி; வெளியாகும் படங்களால் சீற்றம்!
மீண்டுமொருமுறை பார்க்கவிரும்பாத புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்று அறிவித்துள்ளது.
நான் மீண்டுமொருமுறை பார்க்கவிரும்பாத படங்கள் என மேகன் குறிப்பிட்டிருந்த படங்களையே குறித்த தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த ப்டங்களை வெளியிடுவதன் மூலம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்று மேகனிற்கு சீற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. அவுஸ்திரேலியாவின் 7 நியுஸ் ஞாயிறு இரவு ஹரியின் மனைவியின் குடும்பத்தவர்களின் பேட்டிகள் அடங்கிய விசேட நிகழ்சியை ஒலிபரப்பாகவுள்ளது.
முறுகல் நிலை
மேகனிற்கும் அவரது குடும்பத்தவர்களிற்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது. மேகனின் குடும்பத்தவர்கள் லொஸ்ஏஞ்சல்சில் அவர் வளர்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்துகொள்ளவுள்ள நிலையில் இதில் ஒரு படம் குறிப்பாக பலரை கவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேகனின் அப்பா இல்லாவிட்டால் மேகன் தற்போதும் ஹோட்டல் பணிப்பெண்ணாகவிருந்திருப்பார் என அவரது உறவினர் ஒருவர் வீடியோவில் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக மேகனிற்கும் ஹரிக்கும் இடையிலான உறவின் ஆரம்ப நாட்கள் குறித்து மேகனின் குடும்பத்தவர்கள் கருத்து வெளியிடவுள்ளனர்.
அதேசமயம் இருவரினதும் திருமணவாழ்க்கை தோல்வியடைந்துள்ளது என மேகனின் உறவினரான சமந்தா என்பவர் தெரிவிக்கின்றார்.
ஹாரி -மேகன் தம்பதி பொருத்தமற்றவர்கள்
அத்துடன் ஹாரி -மேகன் தம்பதி ஒருவருக்கொருவர் பொருத்தமற்றவர்கள் இது ஒரு நச்சு உறவு என அவர் தெரிவிக்கின்றார். எனினும் மேகனின் தந்தை மரணப்படுக்கையிலிருந்து வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதுடன் தான் இழந்த மகள் தன்னிடம் மீண்டுமொருமுறை பேசவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை ஹரியுடனான திருமணத்திற்கு முன்னர் தந்தை பப்பராசிகளுடன் இணைந்து படங்களை வெளியிட்டதால் மேகன் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.