ஒரு பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் அதிரவைக்கும் வீடியோ!
ஒரு பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் அதிரவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். பெரும்பாலன மனிதர்களுக்கு பாம்பை பார்த்தால் மட்டுமல்ல பாம்பு என்று சொன்னாலே அலறி அடித்து ஓடுவார்கள்.
சினிமாவில் தொடங்கி நிஜ வாழ்க்கை வரை பாம்பு என்றால் பயமும் பதட்டமும் நம்முடன் இருந்து கொண்டே இருக்கும். பாம்புகளில் மிக விஷத்தன்மை வாய்ந்தது முதல் பல வினோதமான பாம்புகளை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம்.
பாம்பு மனிதர்களை தாக்குவது, உயிருடன் மற்ற விலங்குகளை விழுங்குவது போன்ற பல பீதியான வீடியோக்களை பார்த்து இருப்போம்.
ஆனால் ஒரு பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் அதிரவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில் சிவப்பு நிற பாம்பு ஒன்று மற்றொரு பாம்பை உயிருடன் ஆக்ரேஷமாக விழுங்குகிறது. இந்த வகையான பாம்புகள் வடஅமெரிக்காவில் அதிகம் காணப்படுகிறது.
பாம்புகள் பொதுவாக தங்களுக்கு இறையாக மற்ற உயிரினங்களை விழுங்குவதை பார்த்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில் ஒரு பாம்பை மற்றொரு பாம்பை விழுங்குவது பார்ப்பவர்களை பீதியடைய வைக்கிறது.