ஜேர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; 6 பேர் பலி
ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் அமைந்துள்ள தாய் மற்றும் சேய் நலன்புரி மையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தனது மகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புரிமை தொடர்பான குடும்பத் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹம்பேர்க் நகருக்கு அருகிலுள்ள ஸ்டேட் நகரின் டன்கர்ஸ்ட்ராஸ் பகுதியில் அமைந்துள்ள இளைஞர் நலன்புரி மையத்திலேயே நேற்று திங்கட்கிழமை (29) அந்த நாட்டு நேரப்படி மதியம் 12:10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த 6 பேரும் இந்த மையத்தின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது, சந்தேக நபரான துப்பாக்கித்தாரியின் மூன்று மாதக் குழந்தையும் அதன் தாயும் அங்கிருந்த அலுவலக அறையொன்றில் இருந்த போதிலும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், இச்சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.