கனடாவில் சினிமா பாணியில் வாகன நெரிசல் மிக்க வீதியில் துப்பாக்கிச் சூடு
கனடாவில் சினிமாப் பாணியில் வாகன நெரிசல் மிக்க பிரதான அதிவேக நெடுஞ்சாலையொன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
ஸ்காப்ரோவின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அதி வேக நெடுஞ்சாலையில் தப்படியோடிய சந்தேகந பரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெல்லாமே மற்றும் எலிஸ்மேர் வீதிகளுக்கு அருகாமையில் இரண்டு வாகன சாரதிகள் மோதிக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதலின் போது ஒரு சாரதி மற்றையவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் மற்றைய சாரதி காயமடைந்துள்ளதாகவும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிறைந்த வீதியில் வாகனத்தை செலுத்தியதாகவும் பொலிஸார் நெருங்கிய போது சினிமா பணியில் வாகனத்தை விட்டு இறங்கி தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் பொலிஸார் குறித்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
பொலிஸார் துரித கதியில் செயற்பட்ட காரணத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.