கேளிக்கை நிகழ்ச்சியில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு; 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் கிரெட்னா அவன்யூ பகுதியில் இன்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்ருள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர் தப்பிச்சென்ற நிலையில் அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.