ரஷ்யாவின் நெற்றிப்பொட்டு அடி..! முடிவில் இருந்து எழுதப்பட்ட சோவியத் ரஷ்யாவின் ரத்த சரித்திரம்
உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாக இன்றைவரை கருதப்படுவது லெனின்கிராட் முற்றுகை ஆகும்.
1941-44 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையிலே இம் முற்றுகை நிகழ்ந்தது.
இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகத் தொடங்கப்பட்டது.
லெனின்கிராட் நகரம் சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான நகரங்களுள் ஒன்றாக இருந்தது. வலிமை வாய்ந்த சோவியத் பால்டிக் கப்பற்படையின் தளமாகவும், பெரும் தொழில்மையமாகவும் விளங்கியது.
சோவியத் ஒன்றியத்தின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் 11 சதவிகிதத்திற்கு லெனின்கிராடே மூலம்.
எனவே ஜெர்மானியப் படைகள் இதனைக் கைப்பற்றுவதில் முனைப்பு காட்டின.
ஃபீல்டு மார்சல் வான் லீப் தலைமையிலான ஆர்மி குரூப் வடக்கு, செப்டம்பர் 1941 இல் லெனின்கிராடை அடைந்து நகரை முற்றுகையிட்டது.
872 நாட்கள் நடைபெற்ற இம்முற்றுகையினால் ஏற்பட்ட உயிரிழப்பு உலக வரலாற்றில் ஒரு நகரத்தில் ஏற்பட்ட மாபெரும் உயிரிழப்பாக அமைந்தது.
முற்றுகையினால் லெனின்கிராட் பகுதியில் பெரும் பஞ்சம் உண்டாகியது. பட்டினிச்சாவுகள் மிகுந்து மாந்தர் ஒருவரையொருவர் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இது தவிர மூன்றாண்டுகள் போரில் 15 லட்சம் சோவியத் வீரர்கள் உயிரிழந்தனர். லெனின்கிராட் முற்றுகை உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாகக் கருதப்படுகிறது.
ரஷ்யா உலக வல்லரசு நாடாக மாறுவதற்கு அடித்தளமிட்ட இவ் முற்றுகை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,