2022 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸின் இறுதி போட்டியாளரான சியன்னா வீர் உயிரிழப்பு
ஆஸ்திரேலிய மாடலும் 2022 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸிற்கான இறுதி போட்டியாளருமான சியன்னா வீர் ஆபத்தான குதிரை சவாரி விபத்தைத் தொடர்ந்து அவரது உயிர் காப்பு சாதனங்களை அகற்றிய பின்னர் 23 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏப்ரல் 2 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் உள்ள வின்ட்சர் போலோ மைதானத்தில் வீர் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்தார.
அப்போது அவரது குதிரை தவறி கீழே விழுந்தது. அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு அவர் பல வாரங்கள் உயிர் காக்கும் சாதனங்களின் ஆதரவுடன் உயிருடன் இருந்தார்.
இந்நிலையில் மே 4 வியாழன் அன்று சியன்னா வீர் இறந்தார்.
வீரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த தகவலை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியன்னா வீர் குடும்பத்தினர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர் மற்றும் அவர்கள் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் அவரை உயிர் காக்கும் சாதனங்களின் ஆதரவிலிருந்து நீக்க முடிவு செய்ததாக தெரிவித்தனர்.
2022 இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெறும் முதல் 27 போட்டியாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சியன்னா வீர் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.