கனடாவை மிரளவிட்ட 400 கிலோ தங்கம் கடத்தல் ; முக்கிய குற்றவாளியான இந்திய வம்சாவளி இளைஞர் விரைவில் சரண்
கடத்தல் சம்பவத்தில் ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணியாற்றிய பரம்பால் சிந்து, சிம்ரன் பிரீத் பனேசர் உள்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில் குறிப்பட்ட சிலர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பரம்பால் சிங் (வயது 54), அமித் ஜலோடா (வயது 40), அம்மாட் சவுதிரி (வயது 43), அலி ராசா (வயது 37) பிரசாத் பரமலிங்கம் (வயது 35) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு மே மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஷித் குரோவர் (37) என்பவரை கனடா பொலிசார் கைது செய்தனர்.
கைது. இந்தியாவில் இருந்து கனடா வந்த அர்ஷித் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவரை விமான நிலையத்தில் பொலிசார் கைது செய்தனர்.
ஒட்டுமொத்தமாக இந்த கடத்தல் வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடைய எஞ்சிய நபர்களையும் கைது செய்ய கனடா பொலிசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், கடத்தப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கத்தை மீட்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை கடத்தப்பட்ட 400 கிலோ தங்கத்தில் ஒரு (1) தங்கமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 399 கிலோ தங்கம் இன்னும் மீட்கப்படவில்லை.
அதேபோல், இதுவரை ரூ.2 கோடி மதிப்புள்ள திருடப்பட்ட ரூ.16 கோடி பணத்தை மட்டுமே மீட்டுள்ளனர். இந்நிலையில், கனடா தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இந்திய வம்சாவளி இளைஞரான சிம்ரன் ப்ரீத் பனேசர் விரைவில் கனடா பொலிசார் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சிம்ரன் ப்ரீத் பனேசரின் வழக்கறிஞர் கூறினார். பனேசர் இன்னும் ஓரிரு வாரங்களில் கனடா திரும்புவார் என்றும், பின்னர் அவர் காவல்துறையில் சரணடைவார் என்றும் வழக்கறிஞர் கூறினார்.
இதேவேளை, தான் நிரபராதி எனக் கூறும் பனேசரின் சட்டத்தரணி, கனேடிய நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், பனேசர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
கனடாவை உலுக்கிய 400 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் முக்கிய குற்றவாளி. அவர் விரைவில் பொலிசார் ரண் அடையப் போகிறார் என்ற தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.