மலைப்பாம்பை வைத்து மற்றொருவரைத் தாக்கும் கனேடியர்: ஒன்ராறியோவில் ஒரு பரபரப்பு சம்பவம்
கனடாவில் இருவருக்கிடையிலான கைகலப்பின்போது, ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
ரொரன்றோவில், ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக தகவல் கிடைத்ததன் பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
Twitter/@crazyclips
அவர்கள் அங்கே செல்லும்போது, ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை வைத்து மற்றொருவரைத் தாக்குவதைக் கண்ட பொலிசார், உடனடியாக அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
ரொரன்றோவைச் சேர்ந்த அந்த நபருடைய பெயர் Laurenio Avila (45) என தெரியவந்துள்ளது.
Laurenio மீது, ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தியது முதல் வாயில்லா ஜீவன் ஒன்றை துன்புறுத்தியது வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Dude uses his pet snake as a weapon during street fight in Toronto ? pic.twitter.com/T2lLKaLe4E
— Crazy Clips (@crazyclipsonly) May 13, 2023
இதற்கிடையில், இந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது. அது 14 மில்லியன் முறை பார்வையிடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.