கனடாவின் கரையோரப் பகுதிகளில் பாரிய மின்சாரத்தடை
கனடாவின் கரையோரப் பகுதிகளில் பாரியளவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான பனி, மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய தாமதமான இலையுதிர்கால புயல் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டு, சாலைகள் சீர்குலைந்து, பல பகுதிகளில் பாடசாலைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு வானிலை அறிக்கைகள்
மூன்று மாகாணங்களிலும் சிறப்பு வானிலை அறிக்கைகள், கனபனிப் பொழிவு மற்றும் பலத்த காற்று எச்சரிக்கைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
நவாஸ்கோஷியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவின் சில பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பனிப் பொழிவு எச்சரிக்கைகளை வழங்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 30 சென்றி மீற்றர் வரையிலும் சில பகுதிகளில் 50 சென்றி மீற்றர் வரையிலும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இக்காலப் பனிப்பொழிவின் பெரும்பகுதி ஈரமான, கனமான பனியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்கரை பகுதிகளில் பனி மற்றும் மழை ஏற்படலாம் என எதிர்கூறப்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் வடக்கிலிருந்து 90 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.