சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்த ஐரோப்பிய நாடு!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் தனது நாடுக்கு வருகை தருவதற்கு தடை விதித்துள்ளது.
ஸ்பெயினுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள், 10 வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக , உள்ளூர்வாசிகளுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகவும், அதிக சுற்றுலாப்பயணிகளால் மக்கள் கூட்டம் ஏற்படுவதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.
இதனையடுத்து , ஸ்பெயினில் உள்ள 43 மாவட்டங்கள், சுற்றுலாப்பயணிகள் வீடுகளை வாடகைக்கு எடுக்க தடை விதித்துள்ளன. கடந்த செவ்வாயன்று (ஜனவரி 14) அமுலுக்கு வந்த இந்த தடை, மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதேவேளை ஸ்பெயின் நாட்டுக்கு பிரித்தானியர்கள் அதிகம்பேர் விரும்பி சுற்றுலா செல்லும் சுற்றுலாத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.