ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் வழங்கவுள்ள விசேட விருந்து..!
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14.11.2022) விசேட விருந்துபசாரமொன்றை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டம்
வரவு செலவுத் திட்டம் இன்று (14.11.2022) ஜனாதிபதியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இராப்போசனம் வழங்குவது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட நிறைவில் வழமையாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கு விசேட தேநீர் விருந்துபசாரமொன்று வழங்கப்படும்.
எனினும் செலவு குறைப்பு நோக்கில் இம்முறை அந்த விருந்துபசாரம் வழங்கப்படப் போவதில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் விருந்துபசாரம்
இந்நிலையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் அதிக விலைகளைக் கொண்டு மதுபான வகைகளுடன் இராசப்போசன விருந்துபசாரம் வழங்குவது எந்த வகையில் நியாயமானது என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பவுள்ளனர்.
இந்த விருந்துபசாரத்திற்கு யார் பணம் செலவிடுகின்றார்கள் என எதிர்க்கட்சியினர் இன்று கேள்வி எழுப்ப உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கப் பணம் செலவிடப்படுகின்றதா என்றும் இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.