இந்திய - சீன உறவை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை
இமயமலை எல்லை மோதலுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் தங்கள் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தவகையில் மேலும் இந்திய தயாரிப்புகளை இறக்குமதி செய்யவும், வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என்று புதுடெல்லியில் உள்ள பீஜிங்கின் தூதர் தெரிவித்துள்ளார்.
இதுதேவேளை சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தெரிவித்துள்ளார்.
“வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மேலும் சீன சந்தைக்கு ஏற்ற இந்திய தயாரிப்புகளை இறக்குமதி செய்யவும் நாங்கள் இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்” என்று சீன தூதர்தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனவரியில், இரு தரப்பினரும் தங்கள் இமயமலை எல்லையில் இராணுவத்தினரை நிறுத்துவது தொடர்பாக ஒக்டோபரில் ஒரு உடன்பாட்டை எட்டிய பிறகு நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாகக் கூறினர்.
சீன நிறுவனங்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான வர்த்தக சூழலை இந்தியா உருவாக்கி, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் என்று சீனா நம்புகிறது என்று அவர் மேலும் கூறினார்.