பரபரப்பான சாலையோரத்தில் காருடன் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை
அயர்லாந்தில் சாலையோரத்தில் காருடன் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றை மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் ஞாயிறன்று மதியத்திற்கு மேல் சுமார் 7 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த காரில் 9 மாதமேயான குழந்தை காணப்பட்டுள்ளது. ஆனால் குறித்த வாகனத்தை திருடிச் சென்ற திருடன், குழந்தை ஒன்று காரில் இருப்பதை அறிந்து, வாகனத்தை சாலையோரத்தில் கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வாகனத்தில் இருந்த 9 வயதுக்கு உட்பட்ட சிறுவன் சாமர்த்தியமாக வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. அயர்லாந்து பொலிசார் தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் 40 வயது கடந்த ஒருவரை கைது செய்துள்ளதாகவும், அவர் மீது கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வீட்டுக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்த காருடன் பிள்ளைகள் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வாகனத்தை பரிசோதிக்கையில் பச்சிளம் குழந்தை ஒன்று காணப்பட்டுள்ளது.