கனடாவின் பரபரப்பான சாலையில் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்: வெளியான புகைப்படம்
கனடாவில் சொந்த வாகனத்தை திருட்டில் இருந்து காக்க முயன்ற பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாணத்தின் Red Deer பகுதியிலேயே குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு பின்னர் நடந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையை துவங்கியுள்ளதாக புதன்கிழமை அறிவித்துள்ள பொலிசார் கேட்ஸ் அவென்யூ மற்றும் 54 அவென்யூ இடையே 59வது தெருவில் 30 வயதான பெண் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவரை Reichel Alpeche என அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமது வாகனத்தை திருட்டில் இருந்து காப்பாற்ற முயன்று, அதனால் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை கொலையாகவே விசாரிக்க இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திருடப்பட்ட வாகனம் மற்றும் மர்ம நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.