அவுஸ்திரேலியாவை திடீரென தாக்கிய புயல்; 2,00,000 பேர் வெளியேற்றம்!
அவுஸ்திரேலியாவை திடீரென தாக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளம் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்வதாக கூறப்படும் நிலையில், சுமார் 2,00,000 மக்களை உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் என மொத்தம் 400 கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டுள்ள கடற்கரை பகுதிகளுக்கு கடுமையான மழை மற்றும் புயல்காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 5 மில்லியன் மக்கள் வாழ்ந்துஇவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திடிரென உருவான இந்த புயலானது, குயின்ஸ்லாந்து முதல் நியூ சவுத் வேல்ஸ் வரையிலான கிழக்கு கடற்கரையில் தெற்கு நோக்கி நகர்ந்ததால், நியூ சவுத் வேல்ஸ் நகரத்தின் பெரும்பகுதிகள் நீரில் காணப்படுகின்றன.
இதனால் சுமார் 2,00,000 மக்களை அவர்களது வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் மேலும் 3,00,000 மக்களை வெளியேற தயாராக இருக்குமாறும் அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், புயலானது, அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்ந்து வருவதால், புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நியூ சவுத் வேல்ஸ் வானிலை ஆய்வாளர் டீன் நரமோர் பேசுகையில்,
அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இந்த புயல் காரணமாக 50 முதல் 150 மிமீ வரை மழை பெய்யக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழைப்பெய்யும் பகுதிகளில் மழையின் அளவானது மாறுபடும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதேசமயம் புயலால், சிட்னி நகரின் நீர் தேக்கங்களில் பாதிப்பு ஏற்பட்டு பயங்கரமான வெள்ளம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.