ஐரோப்பாவில் புதிய ஆபத்தான HIV தொற்று கண்டுபிடிப்பு
ஐரோப்பா நாடுகளிலும் உகாண்டாவிலும் புதிய HIV மாறுபாடு ஒன்றை நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த HIV மாறுபாடுக்கு VB என பெயரிட்டுள்ளனர். நெதர்லாந்தில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த மாறுபாடானது, தற்போது ஐரோப்பா நாடுகளிலும் உகாண்டாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
HIV பாதிக்கப்பட்ட 6,700 பேர்களில் முன்னெடுக்கப்பட்ட விரிவான ஆய்வில், 92 பேர்களுக்கு இந்த புதிய VB மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை HIV பாதிப்பால் உலகம் முழுவதும் 33 மில்லியன் மக்கள் இறந்துள்ள நிலையில், தற்போதுள்ள சூழல் பெருமளவு மாறியுள்ளதாகவே சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மருத்துவத்துறை பலமடங்கு வளர்ச்சி கண்டுள்ளதால் VB மாறுபாடு தொடர்பில் அச்சம் கொள்ளவும் தேவையில்லை என கலிபோர்னியா பல்கலைக்கழக HIV தொற்று நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் VB மாறுபாடு பரவும் தன்மை கொண்டது எனவும் ரத்தத்தில் இதன் அளவு 3.5ல் இருந்து 5.5 மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பா மற்றும் உகாண்டாவில் இதுவரை 109 பேர்களுக்கு VB மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது என்றே தெரிய வந்துள்ளது. மேலும், இந்த மாறுபாடு வைரஸ் 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் தோன்றி இருக்கலாம். 2010-ம் ஆண்டுகளின் இறுதியில் அதன் பாதிப்பு குறைய தொடங்கி இருக்கிறது.
நம்மிடம் அதிநவீன சிகிச்சை முறைகள் இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.