உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி: ரஷ்யா தொடர்பில் முக்கிய முடிவெடுத்த ஸ்விப்ட்
உக்ரைன் - ரஷ்யா நாடாவுகளிடையே கடுமையான போர் நிலவி வருகிறது.
இதற்கு உலகளாவிய ரீதியில் ரஷ்யா மீது கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றனர். உலக வங்கியின் தொலைத்தொடர்பு வலையமைப்பிலிருந்து ஏழு ரஷ்ய வங்கிகளை ஐரோப்பிய ஒன்றியம் (EU) வெளியேற்றியுள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஸ்விப்ட் அமைப்பில் இருந்து 7 ரஷ்ய வங்கிகளை நீக்கியது.
இதேபோல், ஜெர்மனியின் சரக்கு அனுப்பும் நிறுவனமான DHL ரஷ்யா மற்றும் பெலாரஸுக்கு பொருட்களை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்தது.
உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பிறகு லண்டன் உலோகச் சந்தையில் ஒரு டன் அலுமினியத்தின் விலை வரலாறு காணாத வகையில் 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.