பிரான்ஸில் பயங்கர சம்பவம்... மகனால் தாய்க்கு நேர்ந்த கதி! உயிருக்கு போராடும் தங்கை
பிரான்ஸ் இளைஞன் ஒருவர் தனது தாயையும் தங்கையையும் மிகவும் கொடூரமான முறையில் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பிரான்ஸில் லோரியண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் தாய் உயிரிழந்த நிலையில் தங்கை உயிருக்கு போராடுவதாக தெரியவந்துள்ளது. கத்தி குத்து காயங்களுக்குள்ளான சந்தேக நபரின் 23 வயதான தங்கை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தனது தாயையும் தன்மையும் தனது அண்ணன் கத்தியால் குத்திவிட்டதாக அவர் தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது சகோதரி பலத்த காயங்களுக்குள்ளாக உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதனை அவதானித்து அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பொிலஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மூன்றாவது மாடியில் 47 வயதான தாய் உயிரற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாயின் முதுகு மற்றும் முகத்தில் 27 காயங்கள் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேக நபர் இலகுவான முறையில் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதுடையவர் எனவும் அவர் இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த இளைஞனை மனநல மருத்துவரிடம் அனுப்பி சிகிச்சைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் காயமடைந்த தங்கையிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.