மியன்மாரில் இராணுவ ஆட்சியின் கொடூரம்; நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
மியன்மாரில் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் நால்வருக்கு அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியொ ஸேயா தாவ் (Former lawmaker Phyo Zeya Thaw,) , எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான கோ ஜிம்மி (writer and activist Ko Jimmy) , ஹ்லா மியோ ஆங் (Hla Myo Aung) , ஆங் துரா ஸாவ் ( Aung Thura Zaw) ஆகிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக மியன்மார் அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
கடந்த் 2021 பெப்ரவரியில், ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் அரசாங்கத்தை மியன்மார் இராணுவம், இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இராணுவப் புரட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஸ்தாபிக்கப்பட்ட மியன்மார் தேசிய ஐக்கிய அராசாங்கம் எனும் நிழல் அரசாங்கமானது மேற்படி கொலைகளை கண்டித்துள்ளது.
அதேவேளை கடந்த 4 தசாப்த காலத்தில் மியன்மாரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை இதுவே முதல் தடவை என நம்பப்படுகிறது.