பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
பிரித்தானியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்று முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை.
அதற்குள் மக்களிடம் ஆதரவை இழந்துள்ளது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி என தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆண்டுகளில் முதல்முறையாக பிரித்தானிய பணமான பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்த விடயம் பிரித்தானிய மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்நிலையில், நாளை பொதுத்தேர்தல் வந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என மக்களிடம் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவுகள், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு திகிலை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் 54 சதவிகித மக்கள், லேபர் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என தெரிவித்துள்ளார்கள். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவாக 21 சதவிகிதம் மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளார்கள்.
பதவிக்கு வந்து ஒரு மாதம் கூட முழுமை பெறாத நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி மக்களிடயே ஆதரவை இழந்துள்ளதால், அக்கட்சியினர் திகிலடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.