பாகனை இரண்டாகக் கிழித்த யானை!
தாய்லாந்தில் கொளுத்தும் வெயிலில் மரம் இழுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட யானை ஒன்று பாகனை கொடூரமாக தாக்கி உடலை இரண்டாக பிளந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் வெப்ப அலை வீசும் நிலையிலேயே யானை ஒன்று பாகனை கொடூரமாக தாக்கியுள்ளது. போம் பாம் என அழைக்கப்பட்டு வந்த குறித்த யானையானது அதன் பாகனாக செயல்பட்டு வந்த 33 வயது Supachai Wongfaed என்பவரையே தந்தத்தால் பல முறை தாக்கியுள்ளது.
வெப்ப அலை
வெப்ப அலை காரணமாக பாதிக்கப்பட்ட யானையானது அதிகமாக வேலை வாங்கவும் கோபத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
20 வயதேயான அந்த யானையானது ரப்பர் மரத்தோட்டத்தில் மரத்தை இழுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளது.சம்பவத்தின் போது 89 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பொலிஸாருக்கும் அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவயிடத்தில் இருந்து அந்த பாகனின் சிதைக்கப்பட்ட சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சுமார் 500 கெஜம் தொலைவில் அந்த யானையை தன்னார்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, யானைக்கு மயக்க மருந்து அளித்த பின்னரே பாகனின் சடலத்தை மீட்க முடிந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பின்னர் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.