கால்பந்து மைதானத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
நைஜீரியா 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்ததால் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் நேற்று நடந்த ஆப்பிரிக்க மண்டல அணிகளுக்கான பிளே-ஆப் சுற்று ஆட்டத்தில் நைஜீரியா அணி மற்றும் கானா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவானதைத் தொடர்ந்து அவே கோலில் (Away goal) கானா அணி வெற்றி பெற்று 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.
Angry Nigeria fans storm the stadium, after Nigeria lost to Ghana and failed to qualify for the FIFA World Cup in Abuja, Nigeria.#NGRGHA pic.twitter.com/9lnnZdj4vN
— Africa Facts Zone (@AfricaFactsZone) March 29, 2022
உலக கோப்பை போட்டிக்கு நைஜீரியா தகுதி பெறாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
சிலர் நாற்காலிகளை உடைத்தனர். பலர் நைஜீரிய நாட்டின் கால்பந்து கூட்டமைப்பு தலைவருக்கு எதிராக கூச்சலிட்டனர்.
இந்நிலையில் நைஜீரிய பாதுகாப்புப் படை கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்ட ரசிகர்களை கலைந்து செல்ல வைத்தனர்.